பதிவு செய்த நாள்
16
ஜூலை
2021
12:07
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், பிரதிஷ்டா தினம் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. சபரிமலை ஐயப்பன் கோவில், முதன்மை தந்திரி, ஸ்ரீகண்டரு மோகனரு தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.முன்னதாக, அதிகாலையில் கணபதி ேஹாமமும் தொடர்ந்து வஷ்டா அபிேஷகமும் நடந்தது. பின், 108 வலம்புரி சங்காபிேஷகம், களபாபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு ஐயப்ப சுவாமி அருள்பாலித்தார். மகா தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின், அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று மாலை ஐயப்ப சுவாமிக்கு மகா தீபாராதனையும், புஷ்பாபிேஷக சிறப்பு பூஜையும் நடந்தன. பக்தர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.