ராஜபாளையம்: ராஜபாளையம் அம்பல புளி பஜார் அருள்மிகு கருப்பஞானியார் சுவாமி சமாதி கோயில் பொன்னப்ப ஞனியார் ஜீவ சமாது ஆனி குருபூஜை விழா நடந்தது. கருப்ப ஞானியார் மற்றும் பொன்னப்ப ஞனியர் சுவாமிகளுக்கு மாலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. சுற்றுப் பிரகாரத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை பல்வேறு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. பூஜைக்கு பின் சிறப்பு அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தலைவர் வைத்தீஸ்வரன், தர்மகர்த்தா ஞானகுரு, பூசாரி மாரிமுத்து செய்திருந்தனர்.