ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2021 03:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம், ஆனி உத்திர திருநட்சத்திரவிழா நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 9:30 மணிக்கு வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்மாள், பிரியாவிடை அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளை ரகு பட்டர் செய்தார். ஆணி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் மற்றும் தைலக்காப்பு நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.