சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டபோதும் நேற்று வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பிரசித்திபெற்ற இக்கோயிலில் சனிக்கிழமை அதிகமான பக்தர்கள் தரிசிப்பர். குறிப்பாக ஆடி 1ல் கொடியேற்றத்துடன் துவங்கும் ஆடித்திருவிழா தொடர்ந்து 5 சனிக்கிழமை நடக்கும். கொரோனா கட்டுப்பாடுகளால் நேற்று காலை கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டபோதும் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. ஆடி மாதப்பிறப்பையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். எள் தீபம் ஏற்றுதல், காக்கை வாங்கி வைத்தல், உப்பு போடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தினர்.சுரபி நதியில் முதியவர்கள், குழந்தைகள் குளிக்க கைப்பிடி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது சனிக்கிழமைக்கு முதல் நாள் வெள்ளியன்று சனீஸ்வரருக்கும், நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். இந்தாண்டு அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை.