திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் ஜேஸ்டாஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2021 11:07
திருவெள்ளறை : ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலின் ஜேஸ்டாபிசேகத்தை முன்னிட்டு இன்று (21ம் தேதி) காலை 7 மணி அளவில் வட திருகாவிரியிலிருந்து ( கொள்ளிடம் ஆறு) வெள்ளிக் குடங்களில் புனிதீர்த்தம் எடுத்து நொச்சியம் கரையில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக வெள்ளிக் குடத்தை வழியில் எங்கும் கீழே வைக்காமலும் , நிற்காமல் ஓடிக்கொண்டே குடங்களை மாற்றி காலை 9.00 மணி அளவில் திருவெள்ளறை குசஹஸ்த தீர்த்தம் அடைந்து அங்கிருந்து ஆண்டாள் யானை மீது தங்ககுடத்தில் புனித தீர்த்தம் எடுத்து மங்கள இசையுடன் புண்டரீகாட்சப் பெருமாள் சன்னதி சென்றடைந்தது. பின்னர் ஜேஸ்டாஷேகம் சிறப்பாக நடைபெற்றது.