Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்

பதிவு செய்த நாள்

24 நவ
2026
06:11

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமேல் உச்சிப்பிள்ளையார் தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்.  


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 16ல் கொடியேற்றத்துடன் துவங்கிய கார்த்திகை தீபத்திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். நேற்று காலை 8:00 மணிக்கு 16 கால் மண்டபம் அருகே சிறிய வைரத் தேரில் எழுந்தருள ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. கடந்த ஆண்டுகளில் கோயில் வாசலிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரையிலும், கிழக்குப் பகுதியில் அவனியாபுரம் பிரிவு ரோடு வரையிலும் 2 கி.மீ., துாரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு தீபத்துாண் பிரச்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. கிராமப் பகுதிகளில் இருந்து அதிகளவில் மக்கள் வந்தனர். ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் மட்டும் சென்றனர்.


மகா தீபம் ஏற்றம்: திருப்பரங்குன்றத்தில் காலை தேரோட்டமும், மாலை 6.15 மணிக்கு மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். கோயிலுக்குள்  அனுக்ஞை விநாயகர் முன்பு மாலை 5 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன.  அதே சமயம் மலைமேல் தீப மண்டபம் அருகிலுள்ள உச்சிப்பிள்ளையார் முன்பு கும்பங்களில் புனிதநீர் நிரப்பி வைத்து, விநாயகர் பூஜை, அக்னிலிங்க பூஜை, வர்ணபூஜைகள், தீபாராதனைகள் முடிந்து, தீப கொப்பரையில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர்,  துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பாலதீபம் ஏற்றப்பட்டது. கோயில் மணி அடிக்கப்பட்டதும், உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றினர். திருப்பரங்குன்றமே ஜோதி வடிவாக காட்சியளித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகா தீபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
விளக்கேற்றினால் வீடு தேடி வருவார்: திருவண்ணாமலையில் மலைதீபம் ஏற்றும்போது பக்தர்கள் அண்ணாமலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar