செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2026 06:11
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றினர்.
செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகா தீப உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு 22ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், கொடியேற்றமும், இரவு 7 மணிக்கு ருத்ர ஹோமமும், உற்சவர் கோயில் உலாவும் நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு பைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷணமும், உற்சவர் கோயில் உலாவும் நடந்தது. இன்று அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். மாலை 5.00 மணிக்கு அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தன. 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். இதில் அறங்காவலர் இந்திரா ரவிச்சந்திரன், விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.