Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கொடுங்குன்றம் 2500 அடி உயர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் விமரிசை: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் விமரிசை: அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 நவ
2026
06:11

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவில், துாறல் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


திருத்தணி முருகன் மலைக்கோவிலில், இன்று கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர் விபூதி போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில், தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில், பெரிய அகல் விளக்கில், 350 கிலோ நெய் ஊற்றி, மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, மலைகோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘அரோகரா, அரோகரா’ என, பக்தி முழக்கமிட்டனர். நேற்று காலை முதல் அவ்வப்போது துாறல் மழை பெய்து வந்தது. இருப்பினும், பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி நேரமும், நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், இரண்டு மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அறக்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் நித்யா, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகா தீபம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமேல் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar