பதிவு செய்த நாள்
24
ஜூலை
2021
11:07
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் காமராஜர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவிலில், ராஜராஜேஸ்வரி அம்மன், மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலுக்கு முன்பு, சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்தபடி சக்தி மாரியம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல, நரசிம்மநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீரபாண்டி பிரிவு வி.கே.வி., நகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில், ஆடி வெள்ளி சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இவை தவிர, ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.