ஆடி வெள்ளியை முன்னிட்டு இலவச சேலை வழங்கும் விழா குவிந்த பெண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2021 11:07
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே நடந்த இலவச சேலை மற்றும் கூழ் வழங்கும் விழாவில், கொரோனா அச்சமின்றி ஏராளமான பெண்களால் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கோயில்களில் அதிக மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆடி வெள்ளியான நேற்று, காரைக்குடி பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே ஆடி முதல் வெள்ளியான நேற்று, தனி நபர் சார்பில், இலவச சேலை மற்றும் கூழ் வழங்கும் விழா நடந்தது. இதனை அறிந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் சேலை, வாங்குவதற்காக சமூக இடைவெளியின்றி கூட்டமாக குவிந்தனர். பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் பெண்கள் கூட்டம் அலை மோதியது. கொரோனா மூன்றாவது அறை குழந்தைகளை தாக்கும் என்று எச்சரித்து வரும் நிலையில், பலரும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சமூக இடைவெளி கூட்டமாக நின்றனர்.