பதிவு செய்த நாள்
28
ஜூலை
2021
01:07
உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் ஆடிக்கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் ஆடிக்கொடை விழா ஆண்டு தோறும் ஒரு தசரா திருவிழா போன்று வெகுவிமர்ச்சியாக பெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவலையொட்டி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் ஆடிக்கொடை விழா தசரா திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோயில் நிகழ்ச்சி மட்டும் வழக்கம்போல் நடந்தது.
இந்த ஆண்டு ஆடிக்கொடை விழா நடத்துவதற்கான கால் நடுதல் நிகழ்ச்சி நேற்று காலை 8.30 மணிக்கு நடந்தது. முன்னதாக அன்னை முத்தாரம்மன், ஞான மூர்த்தீஸ்வரர் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு சிறப்பு பூஜையும் தொடர்ந்து கோயில் வளாகத்தில் கால் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. கோயில் பட்டர் குமார் பூஜை செய்தார். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் கலை வாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, கணக்கர் டிமிட் ரோ கலந்துகொண்டனர். இரவு முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சி நடந்தது. வரும் ஆக.2ம் தேதி இரவு 8.30 மணிக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 9.15 மணிக்கு வில்லுப்பாட்டு,இரவு 11 மணிக்கு ல் சாஸ்தா பிறப்பு, தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நாளான ஆக.3ம் தேதி காலை மற்றும் மதியம் அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து கும்பம் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் சுற்றி வருதல் நடக்கிறது. ஆக.4ம் தி காலை 6 மணிக்கு முளைப் பாரி தீர்த்தத்தில் கரைத்தல், மதியம் 1 மணிக்கு மேல் அலங்கார தீபாராதனை, கும்பம் புறப்பட்டு கோயில் உள்பிரகாரம் சுற்றி வந்து மஞ்சள் குளித்தல், கோயிலில் கும்பம் சேர்த்து தீபாராதனை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதுகுறித்து யில் செயல் அலுவலர் கலைவாணன் கூறுகையில், ஆடிக்கொடை விழாவில் வரும் ஆக.3ம் தேதி மட்டும் பொது மக்கள் மற்றும் பக்தர்கள், உபயதாரர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்தில் மட்டும் கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும். நிகழ்ச்சிகள் பொது மக்களுக்காக யூடிப் சேனல் மற்றும் உள்ளுர் டிவிகளில் நேரடியாக ஓளிபரப்பு செய்யப்படும் . அரசின் அறிவிப்புக்கு இணங்க வரும் ஆக.3ம் தேதி மட்டும் திருக்கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.