துாத்துக்குடி : துாத்துக்குடி பனிமயமாதா சர்ச்சில் ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். 439வது ஆண்டு திருவிழா, நேற்று காலை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தை குமார் ராஜா, பங்கு நிர்வாகிகள் பங்கேற்றனர். சப்பரபவனி, தேர் பவனி உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. வழிபாட்டில் தனித்தனியே வந்து பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 400 போலீசார் பாதுாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.