பதிவு செய்த நாள்
05
ஆக
2021
03:08
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அருள்மிகு ஆண்டாள் திரு நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கோயில் ஆடிப்பூர திருத்தேர் கொடியேற்று விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன் பாளையத்தில் இக்கோவில் உள்ளது. ஆடிப்பூர திருத்தேர் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆடி மாதம், 17ம் நாள் முதல், 26ம் நாள் வரை, தினசரி காலை, 10.00 மணி முதல், 12.00 மணி வரை, திவ்யபிரபந்த சேவா காலம், சிறப்பு அலங்காரம், நைவேத்தியம், தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இம்மாதம், 11ம் தேதி புதன்கிழமை காலை, 6.00 மணிக்கு மேல் திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாராயணம் காலை, 9.00 மணியிலிருந்து, 11.00 மணிக்குள் சுவாமி திருக்கல்யாண உற்சவம், மதியம் அன்னதானம், மாலை 3.00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி வியாழக்கிழமை காலை, 10.00 மணிக்கு சுதர்சன திருமஞ்சனம், அதைத்தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, விழா குழு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.