தேனி : கொரோனா பரவலை தடுக்க வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஆக. 7 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. ஆனால் இந்த நாட்களில் வழக்கமான கால பூஜைகள் நடைபெறுகிறது.
கோயில் உள்பிரகாரம், வெளி பிரகாரம், வளாக பகுதிகளில் மூன்று நாட்களாக நிர்வாக அலுவலர் சுரேஷ் தலைமையில் துாய்மைப்பணி நடந்தது. கோயில் பணியாளர்கள், போடி பராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர் இதில் ஈடுபட்டனர்.* ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் கருவரை, வெளிப்பகுதி, கோயில் வளாகம் முழுவதும் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.