பதிவு செய்த நாள்
05
ஆக
2021
04:08
விழுப்புரம்,-கொரோனா காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஆடிவெள்ளி, ஆடி அமாவாசையொட்டி, நாளை முதல் 3 தினங்கள் கோவில்களில் திருவிழா நடத்த அனுமதியில்லை என விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்களது செய்திக்குறிப்பு:கொரோனா பரவுவதையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில், திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர், மயிலம் சுப்ரமணிய சுவாமி, பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர், அவலுார்பேட்டை சித்தகீரிஸ்வரர், கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் உட்பட அனைத்து கோவில்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சித்தலுார் அங்காளம்மன் கோவில், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில், பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில், திருக்கோவிலுார் உலகளந்தபெருமாள் கோவில் உட்பட அனைத்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆடிவெள்ளி, ஆடி அமாவாசையையொட்டி நாளை 6ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்யவும், திருவிழா நடத்தவும் அனுமதி கிடையாது. ஆகம விதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.