பதிவு செய்த நாள்
12
ஆக
2021
02:08
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடிப்பூரம் விழா நடந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, காலை, 5:30 மணிக்கு நடை திறந்து மூலவர் அரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு ஆண்டாள் சன்னதியில் விஷ்வக்சேனர், ஆவாகனம், புண்ணியாஜனம், கலச ஆவாகனம், மூலவர் மற்றும் உற்சவர் தாயாருக்கு, ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ரங்க மண்டபத்தில், ஆண்டாள் தாயார் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், ஆண்டாள் தாயாருக்கு சடாரி மரியாதை சேவிக்கப்பட்டது. கோவில் ஸ்தலத்தார், நாச்சியார் திருமொழி என்னும் ஆண்டாள் பாசுரம், திவ்யப் பிரபந்தங்களை செய்வித்தனர். தொடர்ந்து அரங்கநாத பெருமாளிடம் இருந்து மாலை மரியாதை முடிந்து, கோவில் வளாகத்தில் வலம் வந்து, மீண்டும் சன்னதியை அடைந்தார். அங்கு சாற்றுமுறை சேவித்த பின், விழா நிறைவடைந்தது. இவ்விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர்.