ஆடிப்பூரம்.. பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2021 02:08
பெ.நா.பாளையம்: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர திருநாளான நேற்று பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் புதுப் புதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவில் ஆடிப்பூரத்தையொட்டி, நேற்று அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, பெருமாள் மற்றும் ஆண்டாள் உற்சவ அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து, பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல பாலமலை ரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டாள் மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமநாயக்கன்பாளையம் ஆண்டாள் ரங்கமன்னார் கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில், முக கவசத்தோடு சமூக இடைவெளியுடன், பக்தர்கள் பங்கேற்றனர்.