திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே அம்மனுக்கு வளையலணி விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பார்வதி உடனுறை சீத்தபட்டீஸ்வரர் கோவிலில் ஆடி பூரம் விழா நடந்தது.அதனையொட்டி, அம்மனுக்கு நேற்று காலை 11:00 மணியளவில் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து, ஐந்து வகை சாதம் வைத்து குழந்தை பாக்கியம் வேண்டி படையலிட்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.