ஆடி வெள்ளியில் அன்னூர் அம்மன் கோவில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2021 01:08
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, பக்தர்கள் கோவில்களில் திரண்டனர்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று அன்னூர் ஓதிமலை ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியம்மன் கோவிலில், எலுமிச்சை, பீட்ரூட், வெண்டை, கத்தரி உள்ளிட்ட 16 வகையான 1008 காய்கறிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் கோவிலில் முன்புறம் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், 3006 வளையல்களால் ஆதிபராசக்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான செவ்வாடை பக்தர்கள் ஆதிபராசக்தியை வழிபட்டனர். சின்னம்மன் கோவில், எல்லப்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோவில், குன்னத்தூர் வீரமாத்தி அம்மன் கோவில் என 50க்கும் மேற்பட்ட கோவில்களில் நேற்று திரளான பக்தர்கள் ஆடி வெள்ளி வைபவத்தில் பங்கேற்றனர்.