திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2021 05:08
திருப்புத்துார்: திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு நடந்தது.
இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். கடைசி வெள்ள ஆடிவிழாவாக கொண்டாடப்படும். கொரோனா கட்டுபாடு விதிகள் அமலில் இருப்பதால் சமுக விலகலுடன் நடத்தப்பட்டது. வழக்கமாக பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுப்பது வழக்கம். இம்முறை அது தவிர்க்கப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் தனி,தனியாக பால்குடம் எடுத்து அம்மனுக்கு சமர்ப்பித்தனர். காலை 10:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு பாலாபிசேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி அங்கி அணிந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மேலும் ஆலமரத்தடி காளியம்மனையும் பக்தர்கள் வழிபட்டனர். மாலையில் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை வழிபட்டனர். வழக்கமாக நடைபெறும் தீ மிதித்தல், இசை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.