ஆரோவில்" அரவிந்தரின் 149வது ஆண்டு பிறந்தநாள் தினத்தை யொட்டி ஆரோவில் ஆம்பி தியேட்டரில் டான் ஃபயர் மற்றும் தியானம் நிகழ்ச்சி நடக்கிறது.
மகான் அரவிந்தர் 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் இவர் பிறந்த நாள் தினத்தன்று புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் சர்வதேச நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டு 149 ஆவது பிறந்தநாள் தினத்தையொட்டி வரும் சுதந்திர தினத்தன்று, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:45 முதல் 6:30 மணி வரை ஆரோவில் மாத்ரி மந்திர் அருகிலுள்ள ஆம்பி தியேட்டரில் டான் ஃபயர் மற்றும் தியான நிகழ்ச்சி நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இதில் ஆரோவில் வாசிகள் மட்டுமே பங்கேற்க முடியும், வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை. இதே போன்று புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் அறை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, பின்பு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அரவிந்தரின் சமாதியை மட்டும் தரிசனம் செய்யலாம்.