பதிவு செய்த நாள்
16
ஆக
2021
12:08
பெ.நா.பாளையம்: பெரியதடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை அறக்கட்டளை சார்பில், இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
லலிதாம்பிகா அறக்கட்டளையும், ஈரோடு அபிராமி மருத்துவமனையும் இணைந்து இம்முகாமை நடத்தியது. சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் பிறந்தநாளை ஒட்டி, பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை அம்மன் திருக்கோவிலில் இம்முகாம் நடந்தது. முகாமை, லலிதாம்பிகை அம்மன் திருக்கோவிலின் நிறுவனர் சுவாமி ஸ்ரீ ஜெகதாத்மானந்தா சரஸ்வதி துவக்கி வைத்தார். முகாமில், சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் தங்கவேலு, சரவணன், பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், டாக்டர் தங்கவேலு கோவிட் தொற்று குறித்தும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். அதைத்தொடர்ந்து, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சரவணன், சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களும் மற்றும் டயாலிசிஸ் செய்து வருபவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றார். இம்முகாமில், 24 வீரபாண்டி, சின்ன தடாகம், பெரியதடாகம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். முகாமில், 200 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட்டன. இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசிகள் போடப்பட்டன.