15 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2021 10:08
ராமேஸ்வரம் : 15 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தரிசித்து, தனுஷ்கோடியை கண்டு மகிழ்ந்தனர்.
கொரோனா பரவலை தடுக்க ஆடி திருவிழாவில் பக்தர்கள் கூடுவதை தடுக்க வேண்டி ஆக., 1முதல் 15 வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்தது.15 நாட்களுக்கு பின் நேற்று திறந்ததும் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோயிலில் தரிசனம் செய்தனர்.
பின்னர் தனுஷ்கோடிக்கு ஏராளமான வாகனத்தில்சென்ற சுற்றுலா பயணிகள், புயலில் இடிந்த கட்டடங்கள், கடல் அலை அழகை கண்டு ரசித்தனர்.ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் முக கவசம் அணியாமல் திதி, தர்ப்பணம் பூஜை செய்த பக்தர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திருவெற்றியூர்திருவாடானை தாலுகாவில் கோயில்கள் திறக்கப்பட்டன. பக்தர்கள் கூட்டம்குறைவாக இருந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆக. 15ம் தேதி வரை கோயில்களை மூட அரசு உத்தரவிட்டது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் மூடப்பட்டது. நேற்று அதிகாலை வழக்கம் போல் திறக்கபட்டன. ஆடி முடிந்து விட்டதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பக்தர்கள் கூறியதாவது:பிரதோஷம், சதுர்த்தி, சஷ்டி, பவுர்ணமி நாட்களிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு. ஆனால் கோயில் மூடபட்டதால் இந்த தரிசனத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது.ஆவணியில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கியவிழாக்கள் உள்ளது. ஆகவே கோயிலை மூடாமல் இருக்க அரசு உத்தரவிடவேண்டும் என்றனர்.