உத்தரகோசமங்கை: கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதசாமி கோயிலிலும், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலிலும் நேற்று கோயில் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் முக கவசம் அணிந்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வருகின்ற வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் கோயில் நடை அடைக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.