கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: கோவில்களை புனரமைப்பதற்கு பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில், மக்கள் சிறிய கோவில்களை கட்டுகின்றனர்.
அதற்கு நிதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை நிதியில், சிறிய கோவில்களை கட்டி கொடுக்க வேண்டும்.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: திருத்தேர், தெப்பக்குளம் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தான் இந்த நிதி. நடப்பு ஆண்டில், 250 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மானிய கோரிக்கையில், 500 கோவில்களாக உயர்த்தப்படும். சிறிய கோவில்களின் பட்டியல் தந்தால், அதற்கும் திருப்பணிகள் செய்யப்படும்.