பதிவு செய்த நாள்
17
ஆக
2021
02:08
நகரி: சித்துார் மாவட்டம், நகரி நகராட்சிக்குட்பட்ட சிந்தலப்பட்டடை கிராமத்தில் உள்ள பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஆடி மாத ஆண்டு உற்சவ விழா நேற்று நடந்தது.இதையொட்டி, காலையில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், அதே கோவில் வளாகத்தில் உள்ள காமாட்சியம்மன், நவகிரக சன்னிதிகளில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் உற்சவர் பவானியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போன்று, திரவுபதியம்மன் கோவிலிலும், ஆண்டு ஆடி மாத உற்சவ விழா நடந்தது. மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.