சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மழுவேந்தி கருப்பர் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அரிவாள் மீது ஏறி சாமியாடி 8 கி.மீ., தூரம் அருள்வலம் வந்தார்.
சிங்கம்புணரி கீழத் தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோயில் ஆடித் திருவிழா ஆக. 17 ல் நடந்தது. இதையொட்டி கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். 6 அடி நீளமுள்ள கூர்மையான 2 அரிவாள்கள் மீது ஏறி கருப்பர் சாமியாடி அருள்பாலித்த படி 8 கி.மீ., தூரம் ஊர்வலமாக வந்தார். கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, வழியாக சிங்கம்புணரி நாவிதர் ஊரணி வந்தனர். அங்கிருந்து கரகம் எடுத்து சிங்கம்புணரி மழுவேந்தி கருப்பர் கோயிலை வந்தடைந்தனர். அங்கு இரவு 10:00 மணிக்கு கிடா வெட்டி கருப்பருக்கு படையில் போடப்பட்டு வழிபாடு நடந்தது.