பல்லடம்: பல்லடம் அருகே, மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பல்லடம் -மங்கலம் ரோடு மகாலட்சுமிபுரம் பகுதியில் உள்ளது மகா கணபதி கோவில். இக்கோவில் கும்பாபிஷேக விழா, ஆக., 25 விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாக பூஜை உள்ளிட்டவற்றுடன் துவங்கியது. அஷ்டபந்தன மருந்து சாத்துதல், இரண்டாம் கால யாக பூஜை ஆகியவற்றைத் தொடர்ந்து, நேற்று மகா கணபதி கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு, மகா அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.