பதிவு செய்த நாள்
28
ஆக
2021
03:08
பள்ளிப்பட்டு : கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில், வரும், 30ம் தேதி, கிருஷ்ண ஜயந்தி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பள்ளிப்பட்டு அடுத்த, மேலப்பூடி கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பாமா, ருக்மணி உடனுறை வேணுகோபாலசுவாமி கோவில். 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், சமீபத்தில், சீரமைப்பு பணிகள்நடந்து முடிந்தன.இந்நிலையில், வரும் 30ம் தேதி, திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடைபெற உள்ளது.அன்று, காலை, 10:00 மணிக்கு, மூலவர் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு, ஊஞ்சல் சேவையும், அதை தொடர்ந்து உற்சவர் புறப்பாடும் நடக்கிறது.