கண்டரமாணிக்கம்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் நடுவாற்று மருதம்பிள்ளையார் கோயில் கும்பாபிசேகம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் செப்.,9ல் நடைபெறுகிறது. கண்டரமாணிக்கம் அருகில் விருசுழியாற்றில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட மருதுபாண்டியர்கள் போருக்கு போகும் முன்னர் இக்கோயிலில் வழிபாடு நடத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாடுவார் முத்தப்பச் செட்டியாரால் பாடல் பெற்றுள்ளது. இக்கோயில் பல ஆண்டுகளாக திருப்பணி நடைபெறாமல் இருந்தது. தற்போது திருப்பணிகள் நடந்து கும்பாபிசேகத்தை முன்னிட்டு யாகசாலைபூஜைகள் செப்.7 அதிகாலை 4:30 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து மாலையில் முதற்காலயாகசாலை பூஜை, மறுநாள் 2,3 ம் கால யாகசாலை பூஜைகள், செப்.,9 காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். காலை 11:00 மணிக்கு மகா கும்பாபிசேகம் நடைபெறும். ஏற்பாட்டினை நாட்டார், நகரத்தார், பத்மனாபன்,கனகுகருப்பையா,வாவாசித்தேவர் வகையறா உள்ளிட்டோர் செய்கின்றனர்