சேலம்: சேலம், சுகவனேஸ்ரர் கோவிலில் மலை போல குவிந்திருக்கும் குப்பையால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள பிரஸித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். சுகவனேஸ்வரர் கோவில் தென்புறம் உள்ள மலர்வனம் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. மலர்வனத்தில் பக்தர்கள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பேப்பர்கள் நிறைந்துள்ளது. நந்தவனத்துக்கு எதிர்புறம் பணியாளர்கள் தங்கும் பகுதியில் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வண்டிகள் மூலம் தினமும் குப்பையை அள்ளிச் செல்லாததால், கோவில் வளாகத்துக்குள் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. மாநகராட்சி வண்டிகள் மூலம் கோவிலுக்குள் தேங்கும் குப்பையை தினமம் அகற்ற, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவெம்பாவை பெருவிழாக் கழகம் டிரஸ்ட் சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.