திண்டுக்கல்: வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் மாநில ஒக்கலிகர் சங்க கவுரவ தலைவர் ஆறுமுகசாமி தலைமையில் ஜூன் 29 ல் நடக்கிறது. மைசூர் சாமுண்டீஸ்வரி அவதாராமான வீரக்கல் ஸ்ரீ சவுடம்மன் கோயில் 28 ஆண்டுகளுக்குப்பின் ஒரு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 27 ல் அன்று காலை விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகிறது. அறங்காவலர் குழு தலைவர்,முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் கூறியதாவது: ஜூன் 29 வெள்ளியன்று கும்பாபிஷேகம் மாநில ஒக்கலிகர் சங்க கவுரவ தலைவர் ஆறுமுகசாமி தலைமையில் நடக்கிறது. அமைச்சர்கள் விசுவநாதன், ஆனந்தன், எம்.பி.,க்கள் ஞானதேசிகன், சித்தன், தம்பிதுரை முன்னிலை வகிக்கின்றனர். காலை 9.30 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், 10 மணிக்கு சவுடம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. காஞ்சிபுரம் சிற்பி சுப்பையா ஸ்தபதி தலைமையில் குழுவினர் கோயில் திருப்பணிகளை செய்து வருகின்றனர், என்றார்.