திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் யாதவ சமூகத்தினரால் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை 10.00 மணிக்கு கிருஷ்ணருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்து சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து மதியம் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலித்தார். பின்னர் சுவாமி பிரகார வலம் வந்தார். குழந்தைகள் கண்ணன் வேடத்தில் வந்தனர்.