தேவகோட்டை: கிருஷ்ணர் ஜெயந்தியை தேவகோட்டை கோயில்களில் உள்ள கிருஷ்ணர் விக்ரங்களுக்கு பூஜை தீபாராதனை நடந்தது. தேவகோட்டை யாதவ சங்கத்தின் சார்பில் யாதவா தொடக்க பள்ளியில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவித்தும், பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். சங்க நிர்வாகிகள், இளைஞர் அணியினர், ஆசிரியைகள் பங்கேற்றனர். ஜீவா நகரில் மைஇந்தியா கட்சி சார்பில் கிருஷ்ணர் சிலை வைக்கப்பட்டு முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் வழிப்பட்டனர்.