நவநீத கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2021 04:08
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் ஸ்ரீ ராதா ருக்மணி, சமேத நவநீத கிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கொடியேற்றமும், திருவிளக்குப் பூஜையும், நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து இளைஞர்களின் உறியடி நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை யாதவர் உறவின்முறை, இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.