ஒரு கோடிலிங்கம் தரிசனம் ஸ்ரீபெரும்புதுாரில் ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2021 11:09
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீ பெரும்புதுாரில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் கோடி லிங்கம் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ பெரும்புதுாரில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் தியான ஆலயம் மற்றும் கலைக்கூடம் அமைந்துள்ள து. இங்கு ஆன்மீக அருங்காட்சியம், ஆன்மீக ‘வீடியோ ’ அரங்கம் உள்ளது. மே லும், இலவச ராஜயோகம் கற்றுத்தரப்படுகிறது. உடல், மன ஆரோக்கியம் மற்றும் குடும்பம் ஒற்றும ையை வலியுறுத்தி, கோடிலிங்கம் தரிசனம், ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லிங்கத்தை சுற்றி பிரதிபலிக்கும் கண்ணாடிகள் மூலம் கோடி லிங்கம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்கின்றனர். ஸ்ரீ பெரும்புதுாரில் அமைக்கப்பட்டுள்ள கோடி லிங்கம் தரிசனத்தை, கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், பொதுமக்கள் இலவசமாக கண்டு தரிசனம் செய்யலாம். ஆண்டு முழுதும் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட உள்ளது என, பிரம்மா குமாரிகள் அமைப்பினர் தெரிவித்தனர். முன்னதாக, இந்த கோடி லிங்கம் தரிசனத்தை பிரம்மா குமாரிகள் அமைப்பின் தமிழகம் மற்றும் கேரளா மாநில சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே .பீனா, கடந்த 28ம் தே தி திறந்து வைத்தார்.