திருப்பரங்குன்றம் : விநாயகர் சதுர்த்தி கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்க கோரி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் 30 நிமிடங்கள் ஹிந்து முன்னணியினர் கடவுளிடம் முறையிடும் போராட்டம் நடந்தது. நகர் தலைவர் ராஜசேகர்தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வகுமார் துவக்கி வைத்தார். பா.ஜ., மண்டல் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் கூறியதாவது:விநாயகரை வழிபாடு செய்ய கூடாது என கூற முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை கிடையாது. அவரவர் வீடுகளில் விநாயகரை வைத்து வழிபட உரிமை கொடுப்பதற்கு முதல்வர் யார். விநாயகர் வழிபாட்டில் அரசியல் செய்ய கூடாது என்றார்.