புரசம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2021 07:09
புரசம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம். குளித்தலை அருகே தளிஞ்சி ஊராட்சி. புரசம்பட்டி கிராமத்தில் செல்வ விநாயகர். ஸ்ரீ காளியம்மன். முத்து கருப்புசாமி பரிவார சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்ய. கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். கோவில் கும்பாபிஷேகம் செய்ய நேற்று காலை பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றிலிருந்து பால்குடம். தீர்த்த குடங்களை தாரை தப்பட்டை முழங்க . வாணவேடிக்கையுடன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் பால் குடம் .தீர்த்த குடங்களை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து முதல் கால பூஜையில் விக்னேஸ்வர பூஜை .மகா கணபதி ஹோமம். வாஸ்து சாந்தி . மிருத் காணம். ரக்ஷா பந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்து. தீபாராதனையும் நடைபெற்றது. இரண்டாம் நாள் யாக பூஜையில் விநாயகர் பூஜை. புண்யாகவஜனம். வேதிஹ அர்ச்சனை. உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கடம் புறப்பாடுகள் நடந்தது.
செல்வ விநாயகர். காளியம்மன். முத்து கருப்பசாமி ஆகிய கோவில்களுக்கு காலை 9.45 மணியளவில் சிவாச்சாரியர்கள் கந்த சுப்பிரமணியர். வேதரத்தினம் சிவம் ஆகியோர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி. கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம். தீபாராதனையு ஒஃஏம். காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் விழா கமிட்டி யாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள். நன்கொடையாளர்கள். மக்கள். பிரதிநிதிகள் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா குழுவின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.