ரத்தினகிரி கோவிலில் ஒரு மணி நேரம் சுவாமியை தரிசித்த மயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2021 07:09
ரத்தினகிரி: ரத்தினகிரி கோவிலில், ஒரு மணி நேரம் மயில் சுவாமியை தரிசித்தது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரியில் பாலமுருகன் கோவில் உள்ளது. கோவிலில் தினமும் ஐந்து கால பூஜை நடக்கிறது. நேற்று முதல் கால பூஜை காலை 6:00 மணிக்கு நடந்தது. இதற்காக பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் பூஜையில் பங்கேற்றனர். அப்போது மயில் ஒன்று கோவில் கொடி மரம் வாசல் வழியாக வந்து மூலவர் இருக்குமிடத்திற்கு சென்று சுவாமியையும், அலங்காரத்தையும் ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது சுவாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள் இதை பார்த்தனர். முருகனின் வாகனமாக விளங்கும் மயில் சுவாமியை தரிசனம் செய்தது பக்தர்களிடையே பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது.