திருப்பதி: திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் தேவஸ்தானம் இன்று வெளியிட்டது.
கொரோனா காரணமாக திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க தேவஸ்தானம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதையடுத்து, தேவஸ்தானம் இன்று (செப். 8) காலை 6 மணி முதல் திருப்பதியில் உள்ள சீனிவாசம் வளாகத்தில் சா்வ தரிசன டோக்கன்களை வெளியிட்டது. முதலில் சோதனை முறையாக சித்தூா் மாவட்ட பக்தா்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. தினசரி 2 ஆயிரம் தரிசன டோக்கன்கள் வரை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன் பிறகு அதன் எண்ணிக்கையை உயா்த்துவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து முடிவு மேற்கொள்ள உள்ளனா்.