பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: மயில் வாகனத்தில் விநாயகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2021 08:09
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்துநாள் உற்ஸவம் சதுர்த்திப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவில் மயில் வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரசு விதிகளின் படி விழா கோயிலுக்குள் நடைபெறுகிறது. பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நேரில் வர முடியாதவர்கள் யூ ட்யூப் மூலம் நேரலையில் பார்த்துக் கொள்ளலாம்.