திண்டுக்கல் அருகே கி.பி.17 ம் நுாற்றாண்டு நினைவு நடுகற்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2021 02:09
போடி: திண்டுக்கல் அருகே சித்தையன் கோட்டையில் கி.பி.17ம் நுாற்றாண்டை சேர்ந்த நினைவு நடுகற்கள் கண்டு பிடிக்கப்பட்டுஉள்ளன. போடி சி.பி.ஏ., க ல்லுாரி தொல் பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறுகையில்: கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வழிகாட்டுதலின் படி பேராசிரியர்கள் எனது தலைமையில், திண்டுக்கல் அருகே நெல்லுார் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி, வரலாற்று ஆசிரியர் கருப்பையா ஆகியோர் தொல்லியல் கள ஆய்வு திண்டுக்கல் மாவட்டம், சித்தையன் கோட்டை அருகே அழகர்நாயக்கன்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம்.
இங்கு கி.பி.17ம் நுாற்றாண்டை சேர்ந்த இரு நினைவு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒன்றில் கீழ் அடுக்கில் வீரன் ஒருவன் தன் மனைவியுடன் சமபங்க நிலையில் நின்றுள்ள காட்சியயை புடைப்புச்சிற்பமாக வடிவமைத்துள்ளனர். வீரனின் வலது கையில் துப்பாக்கி பிடிக்கப்பட்டுள்ளது. இடது கை இடது இடையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் வீரனின் மனைவி தனது வலது கையில் தீ பந்தம் பிடித்த படியும், இடது கை இடது இடையில் வைத்த படி் உள்ளார். இருவரும் நாயக்கர் காலத்தில் அணியும் கொண்டை அமைப்பு உள்ளது. பெண்கள் நினைவாக சதிக்கல் இரண்டாம் அடுக்கில் துப்பாக்கி வீரனும், அவன் மனைவியும் இறந்த பின் சொர்க்கலோகம் சென்றதை கூறும் விதமாக இருவரும் கைகளை கூப்பி வணங்கி நின்றுள்ள காட்சியை சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் பெண் தனது குழந்தையை இடது இடையில் அமர்த்தியபடி நிற்கும் காட்சியை புடைப்புச்சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் பெண் ஒருத்தி வலது கையில் தீ பந்தம் பிடித்து சமபங்க கோலத்தில் நின்றுள்ளனர். சதி செய்து இறக்கும் பெண்களின் நினைவாக எடுக்கப்படும் சதிக்கல்லில் அவர்களின் கைகளில் தீ பந்தம் காட்டப்பட்டிருக்கும். இதே போல இந்த நடுக்கல்லிலுள்ள பெண்களின் சிற்பத்திலும் தீ பந்தம் உள்ளதால் இது ச திக்கல் வகையை சார்ந்ததாகும். குறுநில மன்னர் தலைப்பாகை இதே பகுதியில் காணப்படும் மற்றொரு நினைவு நடுக்கல்லில் சமூகத்தில் உயர்ந்தவர்கள் அல்லது குறுநில மன்னர்கள் அணியும் தலைப்பாகையுடன் ஒரு ஆண் தன் மனைவியருடன் கை கூப்பி வணங்கிய நிலையில் புடைப் புச்சிற்பமாக வடிவமைத்துள்ளனர். இவர்கள் இப்பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னர்களாக இருக்கலாம். அல்லது அனைவராலும் மதிக்கும் மனிதராக இருக்கலாம். இதனால் இறந்த பின்னர் அவர்கள் நினைவாக நடுகல் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.