திருச்செந்துார் கோயிலில் ஷிப்ட் முறையில் பணி: அர்ச்சகர்களுடன் ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2021 02:09
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அர்ச்சகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழக இந்து மய அறநிலையத் த றை அமைச்சர் சேகர் பாபு கடந்த செப். 14ம் தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயிலில் விஐபி தரிசனத்தை கட்டுப்படுத்திடவும், அர்ச்சகர்களை ஷிப்ட் முறையில் பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்வார் என அறிவித்தார். நேற்று கோயில் கோவிந்தம்மாள் மண்டபத்தில் வைத்து அர்ச்சகர்களுடன் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திருச்செந்துார் ஆர்டிஓ கோகிலா, ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், திருக்கோயில் இணை ஆணையர் (பொ) அன்புமணி, தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கோயிலில் அர்ச்சகர்களை ஷிப்ட் முறையில் நணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக திரிசுதந்திர சபையினர் மற்றும் அர்ச்சகர்களிடம் மாவட்ட கலெக்டர் கருத்தினை கேட்டறிந்தார். அப்போது அவர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் பாதையினை சீரமைப்பது தொடர்பாக வௌ்ளிக்கிழமை (செப். 17) நேரில் ஆய்வு செய்யப்படும் எனவும், கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படவேண்டிய அர்ச்சனை பங்குத்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.