ஏரல்: மாவடி பண்ணை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மாவடிபண்ணை18 பங்கு நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்கிழமை கொடைவிழா நடக்கிறது. இந்த ஆண்டு அம்மன் கொடைவிழா நடந்தது.
கொடைவிழா நிகழ்ச்சியாக அன்று காலை மேளவாத்தியங்களுடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் சிறப்பு பூஜை, அலங்காரத்துடன் மதிய கொடை, இரவு முளைப்பாரி எடுத்தல், நேமிசம் கொண்டு வருதல் ஆகியவை நடந்தது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் பொன்சப்பரத்தில் எழுந்தருளி நகர் உலா சென்ற நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடந்தது. நகர் உலா சென்றஅம்மனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து திருக்கண் சாத்தி பக்தர்கள் வழிபட்டனர். விழாவை முன்னிட்டு மாவடி பண்ணைநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. விழாவில் மும்பை, சென்னை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் பலபகுதிகளிலிருந்து 18 பங்கு நாடார் சமுதாய மக்கள், தொழிலதிபர்கள், சுற்று வட்டார கிராம மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடைவிழா ஏற்பாடுகள் அனைத்தையும் மாவடிபண்ணை 18 பங்கு நாடார் சமுதாய மக்கள் செய்திருந்தனர்.