சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மலைமீது இருந்து கற்கள் நம்பெருமாள் எழுந்தருளிய குகை மீது விழுந்து குகையும், அதன்முன் இருந்த கல்மண்டபமும் முழுமையாக சேதமடைந்து விட்டன. அந்த குகையையும், புதிய கல்மண்டபம் அமைக்கும் திருப்பணியும் துவங்கியுள்ளது. இத்திருப்பணிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பொருள், பண உதவி செய்யுமாறு ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.