பதிவு செய்த நாள்
27
செப்
2021
10:09
வாலாஜாபாத்: ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத, இரண்டாவது சனிக்கிழமை அன்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.நேற்று முன்தினம் இரவு நடந்த திருக்கல்யாண வைபவ உற்சவத்தை முன்னிட்டு, முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து கல்யாண சீர்வரிசை, மங்கள வாத்தியம் முழங்க, கிருஷ்ணர் கோவிலை வந்தடைந்தது.தொடர்ந்து, ராதா - ருக்மணி, கிருஷ்ணருக்கு திருக்கல்யாண உற்சவத்தை, சிவாச்சாரியார் நடத்தினார். கிராம மக்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர், திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா வந்தனர்.