வார இறுதி நாட்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி தேவை: பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2021 05:10
பழநி: பழநி கோயில்கள் நிறைந்த நகரம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு கோயில் தரிசனத்திற்கு அனுமதி இல்லாததால் உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடிவதில்லை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடும், புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடும் நடைபெறும். சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்க முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் கோயில் வாயிலில் நின்று சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.ஹோட்டல்கள், பள்ளிகள், கடைகள், பேருந்துகள், சினிமா தியேட்டர்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு வார இறுதி நாட்களில் அனுமதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில்கள், திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், "ஹிந்துக் கோயில்களில் மட்டும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கபட்டு வருகிறது. பிற மதத்தவர் வழிபாடுகள் செய்ய இடையூறு ஏற்படுவது இல்லை. எனவே கோயில்களில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு டோஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை கோயில் தரிசனத்திற்கு அனுமதித்தால் தோற்று பரவுவது தடுக்கப்படும்" என்றார்.