கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்று கொண்டாடிய திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2021 12:10
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் பெண் தெய்வத்தை கடந்த 3 தலைமுறைகளாக ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா நடந்தது.
முதல்நாடு கிராம கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து புரட்டாசி 3வது வாரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஒருவாரமாக இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை.கொரோனா தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வரவும்,நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டி பெண்கள் நடமாட்டம் இல்லாத கண்மாய் பகுதியில் உள்ள எல்லைப்பிடாரி அம்மனுக்கு பீடம் அமைத்து நள்ளிரவில் 50 கிடா பலியிட்டு சிறப்புபூஜை செய்தனர்.கடந்தாண்டு தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை ஒவ்வொரு வீடாக சென்று சேகரித்த அரிசியில் பச்சரிசி சாதம் தயார் செய்து படையல் படைத்தனர். விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 3000க்கும் அதிகமான ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு பனைஓலையால் செய்த மட்டையில் அசைவ விருந்து, பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டது. சாதம் வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்தவை அங்கேயே புதைக்கப்படும் என கிராமமக்கள் தெரிவித்தனர்.