* அன்பு, அருள், இரக்கம், கருணை, அறிவு இருந்தால் நீயும் தெய்வமாகலாம். * தினமும் கடவுளை வணங்கு. * பிறரிடம் உயர்வு, தாழ்வு பார்க்காதே. * பசித்தவருக்கு உணவு கொடுத்தால் மகிழ்ச்சியாக நீ இருப்பாய். * யாரையும் துன்புறுத்தாதே. அதுவே விரதத்திற்கு சமம். * யார் கேட்டாலும் உதவி செய். * பிறர் பொருளுக்கு ஒருபோதும் ஆசைப்படாதே. * கோபம், பொய், பொறாமை, கடுஞ்சொல் வேண்டாமே. * எதற்கும் பயப்படாதே. அதற்காக பயமில்லாமல் இருக்காதே. * கடவுளை நம்பு. எல்லாம் சரியாகும். * மந்திரம் சொன்னால் போதாது. கடவுளின் திருவடியில் மனம் ஒன்ற வேண்டும். * வஞ்சகனின் வார்த்தைக்கு செவி சாய்க்காதே. * யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதே. * உனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த குருவை வணங்கு. * உண்மை பேசு. உன் மரியாதை உயரும். * நல்லதை உடனே செய். * கொடுத்த வாக்கை காப்பாற்று. உலகம் உன்னை மதிக்கும். * நல்லவர்களின் மனதை புண்படுத்தாதே. * பிறர் தானம் செய்வதை தடுக்காதே. * பொதுநலத்துடன் செயல்படு. * எண்ணம், செயலை ஒன்றாக்கு. வாழ்வு வளம் பெறும்.