* மனதில் உறுதியும், செயலில் ஒழுக்கமும் இருந்தால் நீ நினைத்ததை நினைத்தபடி அடையலாம். * இன்பத்தை விட துன்பத்தில் கிடைக்கும் அனுபவம் மதிப்பு மிக்கது. * கவலைப்படாதே.. உனது சக்தி வீணாகும். * நல்லதை செய். அதுவே மனநிறைவை தரும். * இனிமையாகப் பேசு. உலகை வசப்படுத்தலாம். * ஆசையை சீர்படுத்து. வாழ்வு ஆனந்தமாகும். * கடமையை சரியாக செய். அப்போதுதான் கடவுள் அருள்புரிவார். * உழைப்பால் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது. * உண்மையும், நேர்மையும் கொண்டவன் துன்பத்தை கண்டு பயப்படத் தேவையில்லை. * நீ மகிழ்ச்சியாக இரு. சமுதாயம் மகிழ்ச்சியாக வாழும். * தம்பதி இடையே அதிகம் விட்டுக் கொடுப்பவரே அறிவாளி. * பிறர் செய்யும் குற்றத்தை பெரிதுபடுத்தாதே. * விட்டுக்கொடுத்து வாழு. அது உன்னை வாழவைக்கும். * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது உணரப்படுவது. * உறக்கம் மிகவும் அவசியமானது. அதுவே உடலை பாதுகாக்கும்.